Monday, May 3, 2010

பிடிக்காது:






உனக்கு பிடித்ததை மட்டுமே செய்யும்
பிடிக்காதவன் நான்..
என்னை பிடிக்காது என்று தெரிந்தும்
எனக்கு பிடித்தவள் நீ !

குழந்தையாய் நீ !






ஒருவயது குழந்தையாய் நீ !
அதன் கையில் கிடைத்த
ரூபாய் நோட்டாய் என் காதல்!


என் படைப்பில் அழகு:




நான் கனவுலகில் பிரம்மலோகம் சென்ற போது
அங்கு "என் படைப்பில் அழகு" என்ற புத்தகத்தை பார்த்தேன் ..
அதை யாருக்கும் தெரியாமல்
அவசர அவசரமாய் புரட்டிய போது ..
கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..





No comments:

Post a Comment