யாருக்கும் தெரியாமல் உன்னை பார்க்க உன் விட்டிற்கு நான் வந்த போது ...
உன் வீட்டு கோலம் சொன்னது... "நீ எதையோ கிறுக்கிவிட்டு கவிதை என்கிறாய் ! ஒரு கவிதை கிறுக்கிய கிறுக்கல் நான் "என்றது..
உன் வீட்டு அழைப்புமணி சொன்னது.. "அவள் அபூர்வமாய் மீட்டும் வீணை நான்." என்றது உன் வீட்டு மிதியடி சொன்னது. "மதி அவள் மிதிக்கும் மதியடி நான் " என்றது உன் வீட்டு நாய்குட்டி சொன்னது. "செல்ல பிராணி அல்ல நான் உன் செல்லம் வளர்க்கும் பிராணி நான்" என்றது .. உன் வீட்டு பூச்செடி சொன்னது. "ஒரு பூ வளர்க்கும் பூச்செடி நான் " என்றது ..
உன் வீட்டு மொட்டைமாடி சொன்னது. "அவள் அழகை ரசிக்க வரும் நிலவையும் மழையையும் விரட்டும் காவலன் நான்"என்றது ..
உன் வீட்டு பூஜை அறை சொன்னது.. "கோவிலில் சிறு அறை நான்" என்றது
உன் வீட்டு படுக்கையறை சொன்னது. "அவள் தூங்குவதை பார்த்தே தூக்கம் தொலைத்தவன் நான்" என்றது ..
உன் வீட்டு சமயலறை சொன்னது. "உணவு பொருட்களை சொர்க்கம் அனுப்பும் சொர்க்க வாசல் நான்" ..என்றது ..
உன் வீட்டு குளியலறை சொன்னது.... "உண்மையில் அழகில் குளிப்பவன் நான்" என்றது
இவையெல்லாம் திடிரென நீ யார் என்றது.. எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன்.. எப்படி சொல்வேன் அவைகளிடமிர்ந்து உன்னை பிரித்து செல்ல வந்தேன் என்று..
நான் கனவுலகில் பிரம்மலோகம் சென்ற போது அங்கு "என் படைப்பில் அழகு" என்ற புத்தகத்தை பார்த்தேன் .. அதை யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாய் புரட்டிய போது .. கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..
உனக்காக கால்கடுக்க காத்திருக்கையில் நண்பனின் ஆறுதல் வார்த்தை "அவ கண்டிப்பா வருவா மச்சி" நண்பனுக்கு நான் சொல்லும் ஆறுதல் வார்த்தை "வேற என்ன சாப்புடுற மச்சி"
உன் பெயரை வைத்துகொண்டு என்னால் ஒரு கவிதை புத்தகமே தொகுக்க முடியும் .. ஆனால் யோசிக்கிறேன் மற்றவர்கள் படித்தால் அவர் கை படுமே என்று.. நீ அதை வெயில்கால விசிறியாக்கிவிடுவாய் என்று..
உன் பார்வை பிடிக்கும் என்றேன் சிரிக்கிறாய்.. உன் சிரிப்பு பிடிக்கும் என்றேன் வெட்கபடுகிறாய்... உன் வெட்கம் பிடிக்கும் என்பேன் .. என்ன செய்வாய் ? கோவபடுவையா.. உனகே தெரியும் அதுவும் எனக்கு பிடிக்கும் என்று...
என் பக்கத்துக்கு வீட்டு குழந்தையிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்றேன் அம்மா என்றது... சற்றும் எதிர்பார்கவில்லை உனக்கு யாரை பிடிக்கும் என்று என்னை கேட்டது.. எப்படி சொல்வேன் உன் பெயரை.. என் அம்மா அருகில் அமர்ந்திருக்க
வாரவாரம் கோவிலுக்கு நீ கடவுளை பார்க்கவருகிறாய்... நான் உன்னை பார்க்கவருகிறேன் கடவுள் உன்னிடம் பேசுவதில்லை .. நீ என்னிடம் பேசுவதில்லை .. நம்பிக்கை ஒன்று தான்.. உன்னக்கு கடவுள் எனக்கு காதல்