உலக அழகி போட்டி
உலக அழகி போட்டிக்கு
நீ மட்டும் சென்று விடாதே ..
உன்னால் ஆண்டுக்கு
ஒரு முறை நடைபெற்ற போட்டி
இனி ஆயுள்க்கு ஒரு முறை என மற்றபடலாம்...
உன் பெயரை மட்டும் ...

தாயின் பெயரை எழுதினேன்
ஒன்றாம் வகுப்பு தேர்வில் ....
தந்தை பெயரை எழுதுகிறேன் ..
விண்ணப்ப படிவங்களில் ...
ஏனோ உன் பெயரை
ஆயிரம் முறை எழுதுகிறேன் ..
கையில் சிறு துரும்பு கிடைத்தாலும்..
நானும் உன் வீட்டு கண்ணாடியும்

நானும் உன் வீட்டு கண்ணாடியும் ஒன்றுதான்..
நீ சிரித்தல் நானும் சிரிப்பேன் ..
நீ அழுதால் நானும் அழுவேன்...
நீ ஒரு கல் எரிந்து பார்..
கண்ணாடி உன் முன் நிற்காது..
நான் நிற்பேன் அதே சிரிப்போடு..
நார்த்திகன் நான்.

வாரம் தவறாமல் கோவிலுக்கு செல்லும்
நார்த்திகன் நான்..
நீ வருவாய் என்பதால் .....
நினைவுகள்

என் நினைவுகளுகெல்லாம்
திடீர் என உயிர் வந்தால்..
உனக்கு நிற்க கூட
இடம் கிடைக்காது ......
லப்டப்

உனக்கு செல்ல பெயர் வைத்துளேன்
"லப்டப்" என்று...
என் இதழ்கள் சொல்ல மறந்தாலும்..
என் இதயம் சொல்ல மறக்காது ... மறுக்காது
சதுரங்கத்தில்

சதுரங்கத்தில் ஏன்
பொய்யாட்டம் ....
உனது புறம் மட்டும்
இரண்டு "ராணிகள்"
பட்டம் பெற்றேன்

படித்தேன் புரியவில்லை
படித்தும் முடிக்கவில்லை
ஆனால் பட்டம் பெற்றேன்
"காதல் தோல்வி" என்று
புத்தகத்தின் அட்டையில்
உன் பெயர்
தேர்தல் நேர தலைவர்கள் சிலை போல்..

தேர்தல் நேர தலைவர்கள் சிலை போல்..
அழகாய் இருக்கிறேன் ..
நீ என்னை கடக்கின்ற..
அந்த ஒரு நொடி மட்டும்..
குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல :

தட்டில் சோறுடன்
குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல
இதயத்தில் காதலுடன்
உன் பின்னல் ஓடி வருகிறேன் ......
தாயோ நிலவை காட்டி சோறு ஊட்டுவாள் ....
நான் என்ன செய்ய ....
நியே நிலவாய் இருக்க ......
மறதி

உன்னை பார்த்த நாள் முதல்
மறதி அதிகமாகிவிட்டது ...
உனை மறக்க மட்டும்
மறந்து விடுகிறேன் .....
நாய்குட்டி

என் காதல் கூட
உன் வீட்டு நாய்குட்டி போலத்தான் ..
நீ கோபமாய் விரட்டியதில்லை...
நீ போ என்று சொன்னாலும் ..
உன்னை விட்டு போவதில்லை..
மூளை முட்டாள் என்றது

என் மூளை என்னை முட்டாள் என்றது ..
காரணம் கேட்டேன் ..
நித்தம் அவளை பற்றியே
யோசிக்க நான் எதற்கு உனக்கு என்றது..
மழையில்

மழையில் நனைய பிடிக்கும் என்று சொன்னாய்...
சற்றும் யோசிக்காமல்
மழையில் நனைந்தேன்
நீ குடைக்குள் நின்று கொண்டு சொன்னாய்...என்பதையும் மறந்து..
தாய்மை

ஒவொரு ஆணும் தாய்மை அடைகிறான்
அவனக்கு "காதல்" என்ற
குழந்தை பிறக்கும் போது...
அனைத்து கவிதைகளும் அருமை..
ReplyDelete